முக்குலத்தோர் வரலாறு
தேவர் என்பது முக்குலத்தோரின் முதன்மையான பட்டங்களில் ஒன்று. முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என்பதே சாதி. தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும்.
தே < தேன் = இனிமை
தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்
இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும். தே+அர்=தேவர், எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது.