கள்ளர் (Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் (தேவர்) எனப்படுவர்.
கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் துவங்கி தற்போது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர்.
"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க.
இந்தியாவில் மிகவும் பழமையான, 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட விருமாண்டி தேவர் என்பவர் கள்ளர் மரபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது